வழிப்பறி, கொள்ளை, கொலைகளில் தமிழகம் முதலிடம் - தமிழிசை

வழிப்பறி, கொள்ளை, கொலைகளில் தமிழகம் முதலிடம் - தமிழிசை

1 mins read

நெல்லை: தமிழகத்தில் பெண்களைக் கொலை செய்வது அதிகரித்து வருவதாக தமிழக பாஜக தலைவி தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இத்தகைய நிலை மாற தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்.

"தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை பீகாரை விட மோசமாக உள்ளது. தமிழகத்தில் 2016ஆம் ஆண்டில் மட்டுமே 487 சாதி மோதல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழிப்பறி, கொள்ளை, சாதி மோதல்கள் போன்ற குற்றச் செயல்களில் இந்தியாவிலேயே பீகார் மாநிலத்தைப் பின்னுக்குத் தள்ளி தமிழகம் முதலிடம் வகிக்கிறது," என்றார் தமிழிசை.