கிரானைட் ஊழல்: 3 நிறுவனங்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

கிரானைட் ஊழல்: 3 நிறுவனங்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

1 mins read

மதுரை: கிரானைட் முறைகேடு புகாரில் சிக்கியுள்ள 3 நிறுவனங்கள் மீது மேலூர் நீதிமன்றத்தில் தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 3,760 பக்கங்கள் கொண்ட இந்தக் குற்றப்பத்திரிகையில் 3 நிறுவனங்களும் ரூ.89 கோடியே 14 லட்சம் அளவுக்கு தமிழக அரசுக்கு வரு வாய் இழப்பு ஏற்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பல பகுதிகளில் பட்டா இடங்களில் அனுமதியின்றி கிரானைட் கற்களை அடுக்கி வைத்திருந்தது உட்பட இந்த நிறுவனங்கள் மீது மேலும் சில புகார்கள் உள்ளன. மேலும் சில நிறுவனங்களும் கிரானைட் மோசடியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.