ஒருமணி நேரத்தில் 6,697 உடலுறுப்பு தானம்: கின்னஸ் சாதனை முயற்சி

ஒருமணி நேரத்தில் 6,697 உடலுறுப்பு தானம்: கின்னஸ் சாதனை முயற்சி

1 mins read

திண்டுக்கல்: ஒரே நேரத்தில் 6,697 பேர் ஒரு மணி நேரத்தில் உடல் உறுப்பு தானம் செய்த சாதனை நிகழ்வு திண்டுக்கல்லில் அரங்கேறியது. நேற்று முன்தினம் உடல் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திண்டுக்கல் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று உடல் உறுப்பு தானம் செய்வதற்கான விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்தனர்.

பிலிப்பீன்ஸ் நாட்டில் ஒரு மணி நேரத்தில் 3 ஆயிரத்து 500 பேர் உடலுறுப்பு தானம் செய்ததுதான் உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது. இதை முறியடிக்கும் விதமாக இந்த முகாமில் 1 மணி நேரத்தில் 6,697 பேர் உடலுறுப்பு தானம் செய்து சாதனை படைத்தனர். புதிய சாதனைக்கான நிகழ்வுகள் அனைத்தும் காணொளியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றைக் கண்டு உறுதி செய்த பிறகு கின்னஸ் சாதனை குறித்து முறையாக அறிவிக்கப்படும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.