சென்னை: இளம்பெண் சுவாதியைக் கொன்ற உண்மையான குற்றவாளி யார் என்பதை விரைவில் அம்பலப்படுத்துவேன் என திலீபன் மகேந்திரன் தெரிவித்துள்ளார். சுவாதி படுகொலை வழக்கு தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்களை வெளியிட்டதால் இவர் மீது அவதூறு புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் கைதான அவர் தற்போது பிணையில் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுவாதி கொலையை வைத்துச் சிலர் மதக்கலவரத்தை உருவாக்கத் திட்டமிட்டதாகச் சாடினார். "சுவாதி கொலை தொடர்பான உண்மைத் தகவல்களைச் சொன்ன பெண்ணைக் கொலை செய்ய திட்டமிட்டனர். அப்பெண் தற்போது ஆப்பிரிக்காவில் இருக்கிறார்," என்று திலீபன் கூறியுள்ளார்.2016-09-08 06:00:00 +0800

