அறுவை சிகிச்சைக்கு தாமதம் செய்த மருத்துவர்கள்; நோயாளி தீக்குளிப்பு

அறுவை சிகிச்சைக்கு தாமதம் செய்த மருத்துவர்கள்; நோயாளி தீக்குளிப்பு

1 mins read

திருவனந்தபுரம்: வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 36 வயது சுனில் என்பவர் நெய்யாற்றின்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காகச் சென்றார். பரிசோதனையின்போது சுனிலின் வயிற்றில் இருக்கும் கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்றவேண்டும் என்று மருத்துவர்கள் கூறினார்கள். அதற்கான நாளும் உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக அறுவை சிகிச்சை தள்ளிப்போய்கொண்டே இருந்தது.

இதனால் வயிற்றுவலியில் அவதிப்பட்ட சுனில், தன் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். மருத்துவமனை ஊழியர்கள் சுனிலின் உடலில் பற்றியிருந்த தீயை அணைத்து அவரை காப்பாற்றினார்கள். காவல்துறையினர் நடத்திய விசாரணையின்போது அறுவை சிகிச்சை தாமதமானதால் வேதனை தாங்கமுடியாமல் தீக்குளித்ததாக சுனில் தெரிவித்தார். இதைதொடர்ந்து அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவரது தீக்காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு விரைவில் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.