'பொகிமோன் கோ' விளையாட்டுக்கு தடை கோரி வழக்கு

'பொகிமோன் கோ' விளையாட்டுக்கு தடை கோரி வழக்கு

1 mins read
6eed5597-e73d-4f7e-9c61-669844513fa8
-

திறன்பேசிகளில் விளையாடும் 'பொகிமோன் கோ' விளை யாட்டு மத உணர்வைப் புண்படுத்துவதாகக் கூறி, அதற்குத் தடைவிதிக்க கோரி பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இவ்விளையாட்டில் 'மான்ஸ்டர்கள்' எனப்படும் குட்டிச்சாத்தான்கள் இருப்பதாகக் காண்பிக்கும். அந்த இடத்திற்கு நடந்து சென்றால் அவற்றைப் பிடிக்கலாம். இப்படித்தான் இதை விளையாட வேண்டும். இந்த திறன்பேசி விளை யாட்டு வழிபாட்டுத் தளங்களில் முட்டைகள் இருப்பதாகக் காட்டுவதால் இதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று அனில் தேவ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த விளையாட்டை உருவாக்கியவர்களுக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. விளையாடும் அனைவரையும் அந்தக் கற்பனை உலகிற்கு அழைத்துச் செல்வது போல் அமைந்துள்ளதால் அனைவரை யும் தன் வசப்படுத்தியுள்ளது இந்த 'பொகிமோன் கோ'. வெறும் விளையாட்டாக மட்டும் இல்லாமல் விளையாடி கொண்டே ஏராளமான பணத்தைச் சம்பாதிக்கும் பொழுதுபோக்காகவும் இது உரு வாகியுள்ளதால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் குஜராத் நீதிமன்றத்தில் 'பொகிமோன் கோ' விளையாட்டைத் தடை செய்யவேண்டும் எனவும் அது சில சமயங்களின் உணர்வுகளைப் புண்படுத்துகிறது எனவும் பொது நல வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஜப்பானில் தொடங்கப்பட்ட 'பொகிமோன் கோ' விளையாட்டுக்கு உலகம் முழுவதும் ஏராளமான பேர் அடிமையாகி வருகின்றனர். இதனால் 15 நாடுகளில் இந்த விளையாட்டைத் தடை செய்துள்ளனர்.