சிவமொக்கா: துங்கபத்ரா ஆற்றில் விநாயகர் சிலையைக் கரைக்கச் சென்றவர்களில் 12 பேர் படகு கவிழ்ந்து உயிரிழந்தனர். உயிரி ழந்த அனைவருமே ஹடோன ஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த 20 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரிய வந்துள்ளது. சிவமொக்கா தாலுகா, -ஹடோனஹள்ளி கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அக்கிராம இளை ஞர் குழுவினர் செய்திருந்தனர். 5 அடி உயரத்தில் மொத்தம் 4 பிள்ளையார் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டன.
அதன்பின்னர் 4 பிள்ளையார் சிலைகளையும் சிவமொக்கா பகுதியில் -ஹடோனஹள்ளி பகுதியில் ஓடும் துங்கபத்ரா ஆற்றில் கரைக்க அக்கிராமத்தைச் சேர்ந்த மஞ்சு, 35, அவரது நண்பர்கள் கணேஷ், வீரேஷ், ஜீவன், சிவக்குமார், நயனா, சங்கர், சாகர், சந்திரப்பா, ரமேஷ், வீரபத்ரப்பா, ஹரீஷ் உள்பட மொத்தம் 22 பேர் திட்டமிட்டனர். அதன்படி புதன்கிழமை மாலை அவர்கள் அனைவரும் 4 பிள்ளையார் சிலைகளையும் ஊர்வலமாக துங்கபத்ரா ஆற்றுப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.
12 பேர் ஆற்றில் மூழ்கி இறந்த சோக சம்பவம் குறித்து ஊரெங்கும் செய்தி பரவியதும் உயிரிழந்தவர் களின் உறவினர்களும் அக்கம்பக்கத்து கிராமவாசிகளும் ஆற்றின் கரையோரம் கூடினர். படம்: ஊடகம்

