கடனை அடைக்க குழந்தையை விற்பனை செய்த தம்பதி கைது

கடனை அடைக்க குழந்தையை விற்பனை செய்த தம்பதி கைது

1 mins read

கான்பூர்: உத்தரப்பிரதேசத்தில் கடனை அடைக்க குழந்தையை ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு விற்ற தம்பதியை போலிசார் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் கான்பூரில் பாபுபூர்வா காலனியில் வசித்து வருபவர் காலித். இவரது மனைவி சயீதா. இந்தத் தம்பதிக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், 5 மாதங்களுக்கு முன்பு அவர்களுக்கு பிறந்த பெண் குழந்தையை விற்று அவர்களுக்கு இருந்த கடனை அடைத்துவிட முடிவு செய்தனர்.

இதையடுத்து ஜலன் மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் ஹாபீன் என்பவர் காலித்தின் குழந்தையை ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு வாங்கித் தூக்கிச் சென்றார். போலிசார் விசாரணை நடத்தியபோது காலித், சயீதா, ஹாபீன் ஆகிய மூவரும் கைதாகினர்.