நாடாளுமன்றத்தில் பொருள் சேவை வரி மசோதா நேற்று நிறைவேறியது

நாடாளுமன்றத்தில் பொருள் சேவை வரி மசோதா நேற்று நிறைவேறியது

1 mins read

புதுடெல்லி: ஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரி மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறியது. நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பொருள் சேவை வரி மசோதாவில் அதிபர் பிரணாப் முகர்ஜி கையெழுத்திட்டு ஒப்புதல் வழங்கினார். இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் நிறைவேறியதால் மொத்தம் உள்ள 29 மாநிலங்களில் 16 மாநிலங்களில் உடனடியாக அமுல்படுத்தப்பட உள்ளது.

பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதாலும் கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளுமே ஆதரவு தெரிவித்ததாலும் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் எந்த சிக்கலும் இன்றி நிறைவேற்றப்பட்டது. இதற்கு நாடாளுமன்றத்தில் நேற்று நன்றி தெரிவித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "ஜிஎஸ்டி மசோதா இந்திய ஜனநாயகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இந்த மசோதாவுக்கு கிடைத்த வெற்றி பாஜகவுக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல. அனைத்து கட்சிகளுக்கும் இந்த வெற்றியில் பங்குள்ளது. இந்திய ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி.

இது வரி பயங்கரவாதத்திலிருந்து மக்களை விடுதலை பெறச் செய்யும். ஜிஎஸ்டி மசோதா வெற்றி பெற உதவிய காங்கிரஸ், பிற கட்சிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று தெரிவித்தார்.