கர்நாடகாவில் இன்று முழு அடைப்புப் போராட்டம்

கர்நாடகாவில் இன்று முழு அடைப்புப் போராட்டம்

2 mins read

பெங்களூரு: தமிழ் நாட்டுக்கு காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதைக் கண் டித்து இன்று வெள்ளிக்கிழமை முழு அடைப்புப் போராட்டத்துக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு கர்நாட காவில் உள்ள அனைத்து அமைப்பு களும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் கர்நாடகாவில் இன்று கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருக்கும்; வாகனப் போக்கு வரத்தும் நிறுத்தப்படும். பெங்க ளூருவில் இன்று போராட்டக் காரர்களால் பதற்றம் ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது.

இன்று முழு அடைப்புப் போராட்டம் காரணமாக வன்முறை ஏற்படுவதைத் தடுக்க அதிரடிப் படைகள் முக்கியப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளன. பெங்களூருவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித் துள்ளார். முதல்வர் சித்தராமையாவை எதிர்த்து அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டு வருகின்றனர்.

கன்னட அமைப்புகள் நடத்தி வரும் இந்த தொடர் போராட்டம் காரணமாக தமிழ்நாட்டில் இருந்து பெங்களூரு, மைசூரு உள்பட கர்நாடகாவுக்குச் செல்லும் எந்த பேருந்துகளும் இயக்கப்பட வில்லை. அந்தப் பேருந்துகள் அனைத்தும் ஓசூர் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் நிறுத்தப்பட்டு திரும்பி வருகின்றன. நேற்றும் 4-வது நாளாக தமிழகப் பேருந்துகள் கர்நாடகாவுக்குள் செல்லவில்லை. இன்று முழு அடைப்பு போராட்டம் நடப்பதால் தமிழக பேருந்துகள் அங்கு இயக்கப்படாது. அதேபோல் கர்நாடகா பேருந்து களும் தமிழ்நாட்டுக்கு வராது. இதைக் கருத்தில் கொண்டு இன்று கர்நாடகாவில் பெரும் பாலான பகுதிகளில் பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங் களுக்கு விடுமுறை விடப்பட் டுள்ளது. பகல் நேர சினிமா காட் சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.