கோவில் விழாவில் மின்சாரம் தாக்கி நால்வர் பலி: 16 பேர் படுகாயம்

கோவில் விழாவில் மின்சாரம் தாக்கி நால்வர் பலி: 16 பேர் படுகாயம்

1 mins read

நெல்லை: மாதா கோவில் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில் நால்வர் பரிதாபமாக உயிரிழந்தனர். நெல்லை மாவட்டம் பரதவர் உவரியில் இச்சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இங்குள்ள மாதா கோவிலில் 10 நாட்களாகத் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் சப்பர பவனி வலம் வந்தது. அப்போது அப்பகுதியில் தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்த மின்கம்பி ஒன்று சப்பரத்தின் மீது எதிர்பாராவிதமாகப் பட்டுள்ளது. இதில் சப்பரம் மீது மின்சாரம் பாய அதை இழுத்துச் சென்ற இருபது பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அனைவரும் அருகேயுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நால்வர் உயி ரிழந்தனர். மேலும் 16 பேருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சோகம் நிலவுகிறது.