புறாவின் காலில் கட்டி கடிதம் அனுப்பினீர்களா என நீதிமன்றம் கேள்வி

புறாவின் காலில் கட்டி கடிதம் அனுப்பினீர்களா என நீதிமன்றம் கேள்வி

1 mins read

சென்னை: சவுதி அரேபியா சென்று கொத்தடிமைகளாக உள்ள தமிழக மீனவர்களை மீட்பதற்கு தமிழக அரசு என்ன நடவடிக்கை களை மேற்கொண்டுள்ளது என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது. இது தொடர்பாக அரசு வழக்கறிஞர் அளித்த விளக்கத்தை ஏற்காத உயர் நீதிமன்ற நீதிபதிகள், மீனவர்கள் கடந்த ஆறு மாதங் களாக அவதிப்படும் நிலையில் அவர்களின் நிலை குறித்து சென் னையில் உள்ள மீன்வளத்துறை செயலருக்கு அனுப்பிய கடிதத்தை புறாவின் காலில் கட்டி அனுப்பி னீர்களா என்றும் கேள்வி எழுப்பி தங்களுடைய கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

ராமநாதபுரம், குமரி, நாகை, தஞ்சை மாவட்டங்களைச் சேர்ந்த 62 மீனவர்கள் மீன்பிடித் தொழி லுக்காக சவுதி அரேபியா சென்று அங்கு கொத்தடிமைகளாக தவித்து வருவதாகவும், அவர்கள் அனைவரையும் மீட்டு வர மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரியும் மீனவரின் உறவினர் ஒருவர் மதுரை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இம்மனு மீது நேற்று முன்தினம் நடந்த விசாரணையின் போது முன்னிலையான அரசு வழக்கறி ஞர், தம்மால் மீன் வளத்துறை செயலரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அதனால் மீனவர்களின் நிலை குறித்து ஏதும் கூற இயலவில்லை என்றும் தெரிவித்தார்.