திருச்சி: திருச்சி விமான நிலையத்துக்கு வரும் பயணி களிடம் புதன்கிழமையிலிருந்து ஸிக்கா கிருமி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த வாரம் இறுதியிலிருந்து சென்னை விமான நிலையத்தில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, திருச்சி விமான நிலையத்திலும் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்பில் பேசிய விமான நிலைய மருத்துவ அலுவலர் சரண்யா, திருச்சிக்கு வரும் விமானப் பயணிகளில் கடுமையான காய்ச்சல் இருக்கும் நபர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மேற்கொள்ளப்படும் சோதனையில் ஸிக்கா வைரஸ் அறிகுறி இருப்பது தெரியவந்தாலோ அல்லது சந்தேகம் இருந்தாலோ அந்த நபர் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்படும்," என்றார்.
திருச்சி விமான நிலையத்தில் ஸிக்கா சோதனை
1 mins read

