குற்றச்செயல்களை ஒடுக்க குண்டர் சட்ட விதிமுறையில் அரசு மாற்றம்

குற்றச்செயல்களை ஒடுக்க குண்டர் சட்ட விதிமுறையில் அரசு மாற்றம்

2 mins read

திண்டுக்கல்: குண்டர் சட்ட விதிமுறையை அரசு தளர்த்தி யிருப்பதால் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் பீதி அடைந்துள் ளனர். ஏற்கெனவே வழக்கு உள்ளவர் களைத்தான் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்ற விதி தற்போது தளர்த்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில், திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் உட்பட, ஒன்றுக்கும் மேற்பட்ட குற்ற செயல்களில் ஈடு படுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர். இதற்கு காவல்துறை எஸ்பியின் பரிந்துரையை ஏற்று ஆட்சியர் உத்தரவிடுவார்.

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படும் பலர் குற்றங்களுக்கான ஆவணங்கள் சரியில்லை என்று காரணம் கூறி நீதிமன்றத்திலிருந்து விடுதலையாகி வெளியே வந்து விடுகின்றனர். இந்த நிலையில், புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவோர் மீது ஏற் கெனவே எந்த வழக்கும் இருக்க வேண்டும் என்பதில்லை. பாலியல் பலாத்காரம், பெண்களை ஆபாச மாகவோ, உடை மாற்றுவதையோ காணொளி எடுத்துத் தொந்தரவு செய்வது மற்றும் சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபடுவோரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது.

இது குறித்துப் பேசிய காவல் துறையினர், "கொலை, கொள்ளை உட்படக் குற்றம் சுமத்தப்படுவோர் மீது ஏற்கெனவே வழக்குகள் இருக்க வேண்டும் என்ற கட்டாய மில்லை என்ற உத்தரவு நல்லது தான்," என்றார். "இதனால் முதல்முறையாக கடும் குற்றம் செய்வோரும் குண் டர் சட்டத்தில் கைதாக வாய்ப்பு உள்ளது. இதனால் ரவுடிகள் குற்றத்தில் ஈடுபடத் தயங்கு வதுடன், குற்றவாளிகள் தப்பிப் பதும் தடுக்கப்படும்' என்று கூறினர்.