சென்னை: பாட்டாளிக்கட்சி நிறுவனர் ராமதாஸ், ஒருதலைக் காதல் என்ற பெயரில் சில தறு தலைகள் மேற்கொண்டு வரும் பாலியல் சீண்டலுக்கு மேலும் ஓர் இளம்பெண் பலியாகியிருப்பதை வன்மையாகக் கண்டித்துள்ளார். இதற்கு காரணமானவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் அண்மைக்காலமாக ஒருதலைக் காதல் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் பாலியல் சீண் டல்களுக்குப் பெண்கள் இரை யாவது அதிகரித்து வருகிறது என்றும் ராமதாஸ் குறிப்பிட்டார்.
"கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பூதாமூர் பகுதியைச் சேர்ந்த புஷ்பலதா என்ற பெண் பாலியல் சீண்டலால் ஏற்பட்ட அவமானம் தாங்க முடியாமல் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தொடர்கதையாகும் இத்தகைய சீண்டல்கள் கண்டிக்கத் தக்கவை. விருத்தாசலம் பூதாமூர் பகுதியைச் சேர்ந்த புஷ்பலதா அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வந்திருக்கிறார். அவருக்கு அதேபகுதியிலுள்ள காதல் நாடகக் கும்பலைச் சேர்ந்த தனசேகரன் என்ற மிருகம் தொடர்ந்து காதல் தொல்லைக் கொடுத்து வந்ததாகவும் அதை ஏற்க புஷ்பலதா மறுத்துவிட்ட தாகவும் கூறப்படுகிறது.
கடந்த 31ஆம் தேதி இரவு புஷ்பலதா பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அவரைப் பின்தொடர்ந்து வந்து வழிமறித்த தனசேகரன் தம்மை காதலிக்கும்படி கட்டாயப் படுத்தியுள்ளார். அதை ஏற்க மறுத்த புஷ்பலதாவை தகாத வார்த்தையால் திட்டியதுடன் கடுமையாக தாக்கியதாகவும் கீழே தள்ளிவிட்டு ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவமானம் அடைந்த புஷ்பலதா அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட குடும்பத்தினர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து கடந்த 8 நாட்களாக அளிக்கப்பட்ட மருத்துவம் பயன் அளிக்காமல் புஷ்பலதா உயிரிழந் தார். தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக ஒருதலைக் காதல் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் பாலி யல் சீண்டல்களுக்குப் பெண்கள் இரையாவது அதிகரித்து வருகிறது.
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த சுவாதி என்ற பொறியாளர் கடந்த ஜூன் 24ஆம் தேதி நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தில் இராம்குமார் என்ற இளைஞனால் கொடூரமாக வெட்டிப் கொலை செய்யப்பட்டார். அதன்பின் விழுப்புரத்தை யடுத்த வ. பாளையம் கிராமத்தில் நவீனா என்ற சிறுமியை செந்தில் என்ற மிருகம் உயிருடன் எரித்துக் கொலை செய்தது. இதையடுத்து கரூர் பொறியியல் கல்லூரியில் சோனாலி என்ற மாணவி வகுப்பறையில் கட் டையால் அடித்தும் தூத்துக் குடியில் பிரான்சினா என்ற ஆசிரியை தேவாலயத்தில் வெட் டியும் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர்களுக்கு முன்பே காரைக்காலில் வினோதினியும், ஆதம்பாக்கத்தில் வித்யாவும் அமிலம் வீசி கொல்லப்பட்டனர்.
கடந்த மாதம் திருச்சியில் மோனிகா என்ற மாணவியும் புதுச்சேரியில் தெரசா என்ற மாணவியும் மனித மிருகங்களால் கத்திக் குத்துக்கு ஆளாகி சாவின் நுழைவாயில் வரை சென்று திரும்பியுள்ளனர். அவர்களைத் தொடர்ந்து இப் போது புஷ்பலதா ஒரு மிருகத்தின் பாலியல் சீண்டலால் உயிரிழந்துள் ளார். காதல் என்ற பெயரில் தொல்லை கொடுப்பதும், அதைத் தவிர்க்க நினைக்கும் பெண்களை வெட்டிக் கொலை செய்வதும், அவமானப்படுத்தி தற்கொலைக் குத் தூண்டுவதும் எந்த வகை யான கலாசாரம் என்பது தெரிய வில்லை.
காதல் என்பது இருமனம் கனிந்தால்தான் ஏற்படும். இதை உணராமல், ஒப்புக்கொண்டால் காதல்.... இல்லையேல் கொலை என்ற போக்கு மிகவும் ஆபத்தான தாகும். பெண் முதலமைச்சர் ஆட்சி செய்யும் மாநிலத்தில், ஒருதலைக் காதல் தறுதலைகளிடமிருந்து பெண்களுக்குப் பாதுகாப்பு இல் லாதது வெட்கக்கேடான செய லாகும் என்று ராமதாஸ் அறிக் கையில் தெரிவித்துள்ளார்.

