தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறந்துவிடப்பட்டதை எதிர்த்து போராட்டம்

தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறந்துவிடப்பட்டதை எதிர்த்து போராட்டம்

1 mins read
4f3b5e35-65bf-4a9b-8a30-190fb3f77067
-

தமிழகத்துக்கு காவிரி நீர் திறக் கப்பட்டதை கண்டித்து கர்நாடக மாநிலம் முழுவதும் நேற்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட் டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பாஜக, மதச் சார்பற்ற ஜனதா தளம் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகளும் விவசாய அமைப்புகளும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றன. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நாள் ஒன்றுக்கு 15,000 கனஅடி காவிரி நீர் கடந்த செவ்வாய்க் கிழமை முதல் தமிழகத்துக்குத் திறந்துவிடப்பட்டு வருகிறது.

ஆனால் அதனைக் கண்டித்து கன்னட அமைப்பினரும் விவசாய சங்கத்தினரும் தொடர் போராட் டங்களை நடத்தி வருகின்றனர். மண்டியா, மைசூரு ஆகிய மாவட்டங்களில் திங்கட்கிழமை முதல் கண்டனப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. பெங்களூரு= மைசூரு தேசிய நெடுஞ்சாலையை மறித்த போராட் டக்காரர்கள் சாலையிலே சமைத்து உண்ணும் போராட்டத்தை நடத்தி னர். தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் சித்தராமையா, நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் ஆகியோரின் உருவ பொம்மைகளை ஆர்ப்பாட்டக்காரர் கள் எரித்தனர். தமிழ்த் திரைப்படக் காட்சிகள் அடியோடு ரத்து செய்யப்பட்டன. மாநிலம் முழுவதும் அரசு அலு வலகங்கள் திறந்து இருந்த போதிலும் சொற்ப அளவு ஊழி யர்களே வேலை செய்தனர்.

சாலைகளின் நடுவே 'டயர்'களை கொளுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.