காந்திகிராமம்: உலகத் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்), திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகம் ஆகியன இணைந்து நடத்தும் 15வது உலகத் தமிழ் இணைய மாநாடு பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச் சியில் பங்கேற்றுப் பேசிய ஜெர்மனி யின் கோலென் பல்கலைக்கழகப் பேராசிரியர் உல்ரிக் நிக்லசு கூறுகை யில், "தமிழ் கூகுள், தமிழ் விக்கி பீடியா ஆகியன உள்ளதுபோல் அனைத்துத் துறை தொழில் நுட்பத்திலும் தமிழ் மொழியை கொண்டு சேர்க்க வேண்டும்.
"ஐரோப்பிய நாடு களில் தமிழ் குடும் பங்களைச் சேர்ந்த வர்கள் 3 தலைமுறை களாக வசிக்கின்றனர். இவர்கள் வீட் டில் தமிழ் பேசினாலும், இவர்களின் குழந்தைகளுக்கு தமிழ் எழுத்து குறித்து தெரிந்து கொள்வதில் சிரமம் உள்ளது. "இதையடுத்து தமிழ் கற்றுக் கொள்ள பள்ளி மாணவர்களை கோலென் பல்கலைக்கழகத்திலுள்ள தமிழ்த் துறைக்கு பெற்றோர்கள் அனுப்புகின்றனர். தமிழ் கற்க வெளி நாட்டு மாணவர்களும் ஆர்வமாக உள்ளனர்," என்றார்.
முன்னதாக செய்தியாளர்க ளிடம் பேசிய உத்தமம் தலைவர் இனியநேரு, "வழக்கமாக சென்னை போன்ற பெரிய நகரங்களில் நடைபெறும் மாநாடு, முதன்முறை யாக தென்தமிழகத்தில் கிராமப் புறத்தில் இயங்கும் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் நடைபெறு கிறது. ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தல், கண்காட்சி அரங்கம், மக்கள் அரங்கம் ஆகிய 3 பிரிவு களாக மாநாடு நடைபெறுகிறது.

