அடுத்த ஆண்டு இறுதியிலிருந்து கல்விச் சான்றிதழ்களையும் பட்டங் களையும் மின்னிலக்க (டிஜிட்டல்) முறையில் வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. அனைத்து கல்விச் சான்றிதழ் களும் மின்னிலக்க முறையில் கிடைப்பதற்காக 'தேசிய கல்வி ஆவணக் காப்பகம்' எனும் இணையத் தரவுத்தளம் (டேட்டா பேஸ்) அமைக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
"இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் 'டிஜிட்டல் இந்தியா' கனவை நனவாக்கும் முயற்சி களில் ஒன்றுதான் இந்த தேசிய கல்வி ஆவணக் காப்பகம்," என்றார் திரு ஜவடேகர். உயர்நிலைக் கல்வி முதல் பல்கலைக்கழக பட்டப் படிப்புகள் வரை அனைத்துக் கல்வித் தகுதி களுக்கும் உரிய சான்றிதழ்கள் இந்த தேசிய அளவிலான தரவுத் தளத்தில் சேமித்து வைக்கப்படும்.
இதன்மூலம் ஒருவரது கல்விச் சான்றிதழ்கள் உண்மையானது தானா என்பதை எளிதில் சோதிக் கலாம் என்பதுடன் அவற்றை எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் பதிவிறக்கம் செய்துகொள்ளவும் முடியும். இந்த முறையில் புதிய கல்விச் சான்றிதழ்களை மாணவர்கள் பெற முடிவதோடு தாங்கள் ஏற் கெனவே பெற்ற சான்றிதழ்களை யும் தேசிய கல்வி ஆவணக் காப்பகத்தில் உள்ள தங்களது பிரத்தியேகமான விவரப் பட்டியலில் அவர்கள் பதிவேற்றிக்கொள்ளலாம்.

