இந்தூர்: வாயைத் திறந்துகொண்டு ஆடவர் ஒருவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரருகே ஊர்ந்து வந்த பாம்பு ஒன்று ஏதோ ஓட்டை தெரிகின்றதே என்று அவரது வாய்க்குள் புகுந்து விட்டது. மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூரில் இந்த சம்பவம் நடந்தது. வினோத் ரகுவான்ஷி என்ற அந்த ஆடவர் வாய்க்குள் பாம்பு புகுந்ததும் 'அய்யோ அம்மா' என்று அலறும்போது அவரையும் அறியாமல் அச்சத்தில் அந்தப் பாம்பைக் கடித்து அதன் தலைப் பகுதியை விழுங்கிவிட்டார். தலையற்ற முண்டம் மட்டும் வெளியில் துடித்துக்கொண்டிருந்தது.
சத்தம் கேட்டு உறக்கம் களைந்து ஓடோடி வந்த அவனது தாயார், மகனின் வாயில் இரத்தம் சொட்டுவதைக் கண்டு அரண்டு போனார். பின்னர் தரையில் பாம்பின் வால் பகுதி மட்டும் துடிப்பதைக் கண்டு விவரத்தை மகனிடம் கேட்டறிந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. உயிருக்கு எந்த ஆபத்தும் இன்றித் தப்பினார். இந்த சம்பவத்தைப்போன்று ஒரு சில மாதங்களுக்கு முன்னர், ஜார்கண்ட் மாநில கிராமத்தில் ஒருவர், தம்மைத் தாக்க வந்த கட்டுவிரியன் பாம்பு ஒன்றைக் கடித்துக் கொன்றார். கடித்த அந்த ஆடவர் 10 மணி நேரத்தில் உயிரிந்தார். இந்த சம்பவத்தில் பாம்பைக் கடித்து விழுங்கிய வினோத் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி னார்.