திருப்பூர்: தமிழகத்தில் உள்ள திரைப்பட ரசிகர் மன்றங்களைக் கலைக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலர் ஈஸ்வரன் கூறியுள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களி டம் பேசிய அவர், காவிரி விவ காரம் தொடர்பில் தமிழகத்தில் உள்ள எந்த நடிகரும் இதுவரை ஒரு கண்டன அறிக்கையைக்கூட வெளியிடவில்லை என்றார். காவிரி பிரச்சினை தொடர்பாக கர்நாடகாவில் நடந்துவரும் சம் பவங்கள் வேதனை அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், கர்நாடக அரசு போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஊக்கப்படுத்தி வருவதாகக் குற்றம்சாட்டினார்.
"தமிழர்களும் போராட்டத்தில் ஈடுபட்டால் இந்திய ஒருமைப்பாடு என்ன ஆகும் என மத்திய அரசு யோசிக்க வேண்டும். கர்நாடகா வில் போராட்டக்காரர்களுடன் நடிகர்களும் இணைந்து தமிழகத் துக்குத் தண்ணீர் கொடுக்கக் கூடாது எனப் போராடுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் உள்ள நடிகர்கள் பேசாமல் உள்ளனர். இந்த நடிகர்களின் ரசிகர் மன் றங்களைக் கலைக்க வேண்டும்," என ஈஸ்வரன் வலியுறுத்தினார்.

