வைகோ: அனைத்துக் கட்சிக் கூட்டம் வேண்டும்

வைகோ: அனைத்துக் கட்சிக் கூட்டம் வேண்டும்

1 mins read

சென்னை: காவிரி நீரைத் திறப்பதால் கர்நாடகா வுக்குத்தான் பாதிப்பு என்ற பிம்பத்தை ஏற்படுத்தும் வகையில் அங்கு திட்டமிட்டுப் போராட்டம் நடத்துவதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ சாடியுள்ளார். இந்த விவகாரத்தில் ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றுபட்டு இருக்கிறது என்ற நிலையைத் தமிழக முதல்வர் ஏற்படுத்த வேண்டும் என அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் வலியுறுத்தினார். "தமிழக முதல்வர் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, தீர்மானம் நிறைவேற்றி, அதைப் பிரதமர் மோடியை சந்தித்து அளிக்க வேண்டும். மத்திய அரசு நடுநிலையோடு செயல்பட வேண்டும்," என்றார் வைகோ.