கர்நாடகாவுக்குச் செவி சாய்க்கக் கூடாது: ராமதாஸ் வலியுறுத்து

கர்நாடகாவுக்குச் செவி சாய்க்கக் கூடாது: ராமதாஸ் வலியுறுத்து

1 mins read
d2dcde3c-703e-438d-b05a-97e613daa152
-

சென்னை: தமிழகத்திற்கு எதிராக கர்நாடகா அரசு வலைவிரித்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் காவிரி விவகாரத்தில் கர்நாடகா அரசின் எந்தக் கோரிக் கையையும் தமிழக, மத்திய அரசு கள் ஏற்கக்கூடாது என வலியு றுத்தி உள்ளார். மேலும் பெங்களூருவில் தமிழ் இளைஞரை தாக்கியவர்களை உட னடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். "காவிரி நீர் சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில் காவிரி பாயும் மாநில முதல்வர்கள் கூட்டத்தைக் கூட்டும்படி பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் கடிதம் எழுதி யுள்ளார்.

இது தமிழகத்தைச் சிக்க வைப்பதற்குக் கர்நாடகத்தால் விரிக்கப்பட்டுள்ள வலையாகும். "இந்தக் கடிதம் வஞ்சம் நிறைந் ததும் தமிழகத்துக்குத் தண்ணீர் விட வேண்டும் என்ற உச்ச நீதி மன்றத் தீர்ப்பைச் சிதைக்கக் கூடியதும் ஆகும்," என ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ் இளைஞர் ஒருவர் பெங்க ளூருவில் கன்னட வெறியர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாகவும் ராமதாஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.