ஊழிக் கூத்தாடும் ஊழலில் இருந்து தாய்நாட்டைக் காப்போம் - சகாயம்

1 mins read
a39b3ce7-91e4-4e7b-8491-6f6a97b5abd5
-

கோவை: ஊழல் செய்பவர்களைத் தண்டிக்கப் போதுமான அளவு சட்டம் இயற்றப்பட்டுள்ளது என ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கூறி உள்ளார். 'ஊழிக் கூத்தாடும் ஊழலில் இருந்து தாய்நாட்டைக் காப்போம்' என்ற தலைப்பில் கோவையில் நேற்று முன்தினம் கருத்தரங்கு நடைபெற்றது. கோவை மாவட்ட ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் நடை பெற்ற இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய சகாயம் லஞ்சம், ஊழலுக்கு எதிரான சட்டங்களைத் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

சென்னை அறிவியல் நகரத் தின் துணைத் தலைவரான அவர், ஊழல் ஒழிப்பு என்பது அரசுக்கு எதிரானது அல்ல என்றும் அது அரசுக்கு மேலும் வலுசேர்க்கக் கூடியது என்றும் தெளிவு படுத்தினார். "கிரானைட் முறைகேடு குறித்து ஆய்வு செய்து விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளேன். நான் ஏற்கெ னவே கூறி இருப்பதைப் போன்று மக்களைப் போலவே நானும் அந்த வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். "இதுபோன்ற வழக்குகளில் கூடுதல் கவனம் செலுத்தி, வலு வான ஆதாரங்களைத் திரட்டி, நீதிமன்றத்தில் சமர்ப்பித்தால் குற்றவாளிக்கு நிச்சயமாக தண் டனை கிடைக்கும். அதேநேரம் லஞ்சம், ஊழலுக்கு எதிரான சட்டங்களை அமல்படுத்தக் கூடியவர்கள் தீவிரமாக செயல் படுவதும் அவசியம்," என்று சகாயம் மேலும் தெரிவித்தார்.

மதுரையில் நடைபெற்ற கிரானைட் குவாரி முறைகேடுகள் குறித்து நீதிமன்ற உத்தரவின் பேரில் விசாரணை நடத்தி அறிக்கை அளித்துள்ளார் சகாயம். அதில் பல்வேறு உண்மை களை அவர் அம்பலப்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.