கேரள அரசைக் கண்டித்துப் போராட்டம்

கேரள அரசைக் கண்டித்துப் போராட்டம்

1 mins read

பொள்ளாச்சி: கேரள அரசைக் கண்டித்து நடைபெற்ற போராட்டம் காரணமாக பொள்ளாச்சி பகுதி யில் பரபரப்பு நிலவியது. இதையடுத்துப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஐநூறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு அணைக் கட்டுவதற்குத் தமிழகத்தில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. பல்வேறு அரசி யல் கட்சிகளும், அமைப்புகளும் அம்மாநில அரசைக் கண்டித் துள்ளன. இந்நிலையில், தமிழக வாழ் வுரிமைக் கட்சியின் சார்பில் பொள்ளாச்சியை அடுத்த மீனாட்சி புரத்தில் கேரள அரசைக் கண் டித்து நேற்று முன்தினம் போராட் டம் நடைபெற்றது.

கேரள எல்லையை முற்றுகை யிடும் இந்தப் போராட்டத்துக்கு அக்கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். பின்னர், போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பொள்ளாச்சியை அடுத்த வளந்தாயமரம் சோதனைச் சாவடி வழியாக கேரள எல்லையை முற்றுகையிட நடைப் பயணமாகச் சென்றனர். அப்போது, கேரள அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 'சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணைக் கட்டும் கேரள அரசைக் கண்டிக்கிறோம்' என்று முழக்கங் கள் எழுப்பியபடி சென்ற ஐநூறுக் கும் மேற்பட்டோரைக் காவல்துறை யினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.