சென்னை: அரசியலில் இருந்து விலகும் எண்ணம் தமக்கு அறவே இல்லை என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாம் அரசியலுக்கு முழுக்குப் போடப்போவதாக வெளியான செய்தி தவறானது என்றார். "நான் பல்வேறு தடைகளைத் தாண்டி வந்தவன். தொடக்கத்தில் பத்திரிகையாளராகப் பணியாற்றத் துவங்கி பல கஷ்டங்களை எதிர்கொண்டு சமாளித்து அரசியலுக்கு ஒரு குறிக்கோளுடன் வந்தவன். "எனவே தோல்வியைக் கண்டு துவள மாட்டேன். என்னைப் பற்றி உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்," என்றார் சரத்குமார். பத்திரிகைகள் இந்தியாவின் தூண்கள் என்று குறிப்பிட்ட அவர், ஊடகவியலாளர்கள் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்றார்.
அரசியலில் இருந்து விலகமாட்டேன்: தெளிவுபடுத்திய சரத்குமார்
1 mins read
-

