தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: பொன்.ராதா

தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: பொன்.ராதா

1 mins read
8d42dc28-e83e-48be-99ba-7d4fbc93d647
-

சென்னை: தாய்மொழியாம் தமிழை மாணவர்கள் எப்போதும் மறக்கவே கூடாது என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார். சென்னையில் நடைபெற்ற காமராஜர் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு பேசியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தாய்மொழிக்கு மாணவர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண் டும் என்றும் அவர் வலியுறுத்தி னார். "குழந்தைகளைப் பெற்றோர் நன்றாகப் படிக்க வைக்கவேண் டும். அப்போதுதான் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும். அதேபோல் பிள்ளைகள் விரும்பும் மொழிகள் அனைத்தையும் படிக்கட்டும். "வாழ்க்கையில் ஒருவர் உச்சத் துக்கு வரவேண்டும் என்றால் பல மொழிகள் தெரிந்தவராக இருக்க வேண்டும்.

"மாணவர்கள் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கவேண் டும். எந்தக் காரணம் கொண்டும் தாய்மொழியாம் தமிழை மறக்கக் கூடாது," என்றார் பொன். ராதா கிருஷ்ணன். ஒவ்வொரு பெற்றோரும் தாய்மொழியின் முக்கியத்துவம் குறித்துப் பிள்ளைகளுக்குச் சிறு வயதிலேயே எடுத்துக் கூற வேண்டும் என வலியுறுத்திய அவர், தாய்மொழியில் சிந்திப்ப தால் மாணவர்களின் அறிவாற்றல் பெருகும் என்றார். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், கல்வித் துறையின் மேம்பாட்டிற்கு என மத்திய அரசு பல்வேறு சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி நல்ல எதிர்காலத்தை கொண்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு துணை நிற்பதாகத் தெரிவித்தார். மோடி அரசுக்கு மக்கள் ஆதரவு இருப்பதாகவும் அவர் கூறினார்.