ஜம்மு: காஷ்மீரின் பூஞ்ச் பகுதி யில் போலிஸ்காரர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் நேற்று முன்தினம் மூன்று தீவிரவாதிகளும் போலிஸ்காரர் ஒருவரும் கொல்லப்பட்டனர். காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் புதிதாகக் கட்டப்படும் ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கிஇருப்பதாகப் பாதுகாப்புப் படை யினருக்குத் தகவல் கிடைத்ததையடுத்துப் போலிசார் அந்த இடத்தைச் சுற்றி வளைத்தனர். இரு தரப்புக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடந் தது. அதில் தீவிரவாதிகள் மூவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் சுட்டதில் காவல்துறையினர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு காவல்துறையினர் காயமடைந்தார். அக்கட்டடத்தில் இருந்து மேலும் ஒரு தீவிரவாதியின் உடலைப் போலிசார் நேற்று கைப்பற்றியுள்ளனர்.
இதேபோல், நவ்காம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த சண்டையில் 4 பாகிஸ்தான் ஊடுருவல்காரர்கள் கொல் லப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவர்களிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன. இதற்கிடையே, கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி பட்கமில் நடந்த வன்முறையின்போது ஜாவித் அகமது தார் (23) என்ப வர் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் உயிரிழந்ததால் வன்முறையில் உயிரிழந் தோர் எண்ணிக்கை 79ஆக உயர்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் நேற்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். ஆர்ப்பாட்டக்காரர்களைக் களைக்க பாதுகாப்புப் படைவீரர்கள் கண்ணீர் புகைகுண்டுகளைப் பயன்படுத்தினர். இதில் போலிஸ்காரர்கள் உட்படப் போராட்டக்காரர் கள் பலரும் காயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர, காஷ்மீரில் 66வது நாளாக நேற்றும் பல்வேறு இடங் களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த வன்முறை சம்பவங்களில் சுமார் 112 பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

