இரு அண்டை மாநிலங்களுக்கு இடையிலான காவிரிப் பிரச்சினையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், கர்நாடக, தமிழக மக்கள் அமைதி காக்கவேண்டும் என்று அவர் வேண்டிக்கொண்டுள்ளார். காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களும் நடந்துகொள்வதைப் பார்த்து மனதளவில் பாதிக் கப்பட்டுள்ளதாகக் கூறிய மோடி, "பிரச்சினைகளுக்கு வன்முறை தீர்வாகாது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும். அங்கு நடைபெறும் வன்முறைச் சம்ப வங்கள் கவலை அளிக்கின்றன. இரு மாநிலங்களும் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும்," என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இரு மாநில முதல் வர்களையும் தொடர்புகொண்டு நிலைமையைக் கேட்டறிந்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிலைமையைக் கட்டுப்படுத்தி சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட போதிய உதவிகளை மத்திய அரசு வழங்கும் என்று உறுதியளித்தார். இந்நிலையில், காவிரிப் பிரச் சினை குறித்து விவாதிப்பதற்காக கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் நேற்று கூடியது. அதில், உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து செயல்படுத்துவது என்றும் இந்த விவகாரம் தொடர்பில் முதல்வர் சித்தராமையா, பிரதமர் மோடியை இன்று சந்தித்துப் பேசுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

