கோவை: தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் மீது கேரள காவல்துறை தடியடி நடத்தியது பரம்பிக்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாகப் பொதுப்பணித் துறை வாகனம் கேரளாவுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட தற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கோவை மாவட்டம், பொள் ளாச்சியை அடுத்துள்ள கேரள வனப்பகுதியான பரம்பிக்குளத் தில் தமிழகத்தை சேர்ந்த பலர் வசிக்கின்றனர். அவர்களின் குழந்தைகள் ஆனைமலை, சேத்துமடையில் இயங்கும் அரசுப் பள்ளிகளுக்குச் சென்று வர வசதியாக தமிழக பொதுப் பணித்துறை மூலம் பல ஆண்டுகளாகப் பள்ளி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் நேற்று முன்தினம் ஒரு பள்ளி வாகனம் பரம்பிக்குளம் செல்ல கேரள வனத்துறை அனு மதி மறுத்தது.
இதனால் அதிருப்தியடைந்த மாணவர்களும், பரம்பிக்குளம் பகுதி மக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அவ்வழியே சென்ற அரசுப் பேருந்தையும் சிறைபிடித்தனர். இதையடுத்து கேரள போலி சார் விரைந்து வந்து சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும் பலன் கிடைக்கவில்லை. எனவே தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகளை உதவிக்கு அழைத்தனர். தமிழக அதிகாரிகள் மறிய லில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு நடத்திக் கொண்டிருந்த நிலை யில் திடீரென அங்கு வந்த கேர ளாவின் மற்றொரு பிரிவு போலி சார் தடியடி நடத்தப் போவதாக எச்சரிக்கை விடுத்தனர். பின்னர் அவர்களின் கோபம் தமிழக அதிகாரிகள் மீது திரும்பி யது. பொது மக்களை போராடுமாறு தூண்டியதே தமிழக அதிகாரிகள் தான் என அவர்கள் ஏசியுள்ளனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் மீதும் தமிழக அதிகாரிகள் மீதும் கேரள போலிசார் தடியடி நடத்தினர். இதில் அதிகாரிகள் படுகாயம் அடைந்தனர். மேலும் மாணவர்கள் ஐந்து பேர் அதே இடத்தில் மயக்கமடைந்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.

