சென்னை: கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து வரும் 16ஆம் தேதி தேமுதிக சார்பில் உண்ணா விரதப் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சித் தலைவர் விஜய காந்த் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், மொத்த அதிகாரத்தை யும் கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா காவிரி விவகாரம் தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடா மல் வாய் மூடி மவுனியாக இருப்பதாக விமர்சித்துள்ளார்.
"முதல்வர் ஜெயலலிதா ஆமை வேகத்தில் செயல்பட்டது உண்மை யிலே கண்டனத்திற்கு உரியது. இரு மாநில மக்களும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டும், பொருட்களையும் உடமைகளையும் அழித்தும், வன் முறையை அதிகளவு நிகழ்த்தும் வரை ஜெயலலிதா அமைதி காத் தது வேதனைக்குரியது. "கன்னட அமைப்பினர் தொடர்ந்து தமிழக மக்களின் உணவகங்கள், சிறு கடைகள் மீது தாக்குதல் நடத்தி, 40 லாரி களையும் 45 பேருந்துகளையும் எரித்து தமிழர்களுக்கு மிகப்பெரிய அநீதியை இழைத்துள்ளனர். "அது மட்டும் அல்லாமல் அப்பாவித் தமிழ் இளைஞரை கன்னட திரையுலகத்தினர் மன் னிப்பு கேட்கச் சொல்லி அடித்து துன்புறுத்திய காணொளி பரவி தமிழக மக்களை மிகவும் வேதனைப்பட வைத்துள்ளது," என விஜயகாந்த் கூறியுள்ளார்.
மாண்டியா பகுதியில் மரம் ஒன்றை வெட்டி சாலையில் போட்டு எரித்த காட்சி. படம்: தகவல் ஊடகம்

