தண்ணீர் தரக்கூடாது; தமிழ்நாட்டுக்கு எதிராக தமிழ்ப் பெண்களே களமிறங்கினர்

தண்ணீர் தரக்கூடாது; தமிழ்நாட்டுக்கு எதிராக தமிழ்ப் பெண்களே களமிறங்கினர்

2 mins read
aa9daa63-a0c3-4fc0-ab29-796fdb7451f2
-

காவிரி நீர் போராட்டம் தொடர்பில் கடந்த திங்கட்கிழமை பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் மூண்ட வன்முறை தொடர்பாக கிட்டத்தட்ட 400 பேர் வரை கைது செய்யப்பட்டு உள்ளனர். 97 வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டதாகவும் 103 வாக னங்கள் சேதப்படுத்தப்பட்டதாக வும் கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஷ்வரா தெரிவித்தார். வன்முறையைத் தூண்டியோரும் வன்முறையில் ஈடுபட்டோரும் தொலைக்காட்சி, செய்தித்தாள் களில் வெளியான படங்கள் மூலம் அடையாளம் காணப்பட்டு வரு வதாகவும் அதனைத் தொடர்ந்து மேலும் பலர் கைது செய்யப் படக்கூடும் என்றும் அவர் கூறி னார்.

இதற்கிடையே பெங்களூருவில் நேற்று இயல்புநிலை திரும்பியது. இருந்தபோதிலும் சில பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டு இருந்த தால் பெற்றோர்களும் மாணவர் களும் குழப்பம் அடைந்தனர். மாநில அரசின் பேருந்துகளும் மெட்ரோ ரயில் போக்குவரத்தும் செவ்வாய்க்கிழமை மாலை முதல் மீண்டும் இயங்கத் தொடங்கின. வன்முறையைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நேற்றுக் காலை விலக்கிக் கொள் ளப்பட்டது. இருப்பினும் 144 தடை உத்தரவு நீடிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சட்ட, ஒழுங்கைப் பராமரிக்க கிட்டத்தட்ட 1,700 துணை ராணுவப் படையினர் மாநிலம் முழுவதும் சுற்றுக் காவலில் ஈடுபட்டு வருகின் றனர். இதற்கிடையே, சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதில் மத்திய அரசுக்கும் கார்நாடகா, தமிழ்நாடு அரசாங்கங்களுக்கும் உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.

கர்நாடக மாநிலம் அமைதிக்குத் திரும்பிக்கொண்டு இருந்தபோதிலும் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் ஆங்காங்கே கர்நாடக எதிர்ப்புப் போராட்டங்கள் நிகழ்ந்து வருகின் றன. புதுச்சேரி காலாப்பட்டைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர்கள் நேற்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சாஸ்திரி பவன் முன்பு 'மே 17' இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நேற்றுக் காலை முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே, மாண்டியாவில் வசிக்கும் தமிழ்ப் பெண்கள் நேற்று காலிக் குடங்களுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர். கர்நாடகாவில் குடிப் பதற்கே தண்ணீர் இல்லாதபோது தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் எதற்கு என்று அவர் முழங்கினர். இப்பெண் களில் பெரும்பாலானோர் வடதமிழ் நாட்டிலிருந்து வயிற்றுப் பிழைப்புக் காக மாண்டியா சென்றவர்கள்.

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர காலிக்குடங்களுடன் எதிர்ப்புத் தெரிவிக்கும் மாண்டியா தமிழ்ப் பெண்கள். மைசூரு மாண்டியா சாலையில் நேற்று இந்தப் போராட்டம் நடந்தது. சிக்மளூரில் உள்ள தமிழ்ச் சங்கத்தினரும் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் திறந்துவிட எதிர்ப்புத் தெரிவித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாட்டுக்கு எதிராக தமிழர்களையே களமிறக்கும் வேலை கர்நாடகத்தில் தொடர்ந்து வருகிறது. படம்: இந்திய ஊடகம்