கணினி நிறுவனங்களுக்கு ரூ.25,000 கோடி இழப்பு

கணினி நிறுவனங்களுக்கு ரூ.25,000 கோடி இழப்பு

1 mins read

பெங்க­ளூரு: கர்­நா­டக மாநி­லத்­தில் வன்­முறை வெடித்­த­தால் பெங்க­ளூ­ரு­வில் உள்ள முன்னணி தக­வல் தொழில்­நுட்ப, இணைய வர்த்­தக நிறு­வ­னங்கள் நேற்று மூடப்­பட்­டன. இந்­தி­யா­வின் தக­வல் தொழில்­நுட்பத் தலை­ந­க­ரம் என்­று அழைக்­கப்­படும் பெங்க­ளூ­ரு­வில் ஏரா­ள­மான மென்­பொ­ருள் நிறு­வ­னங்கள் உள்­ளன. இவற்­றில் நாட்­டின் முன்னணி தக­வல் தொழில்­நுட்ப நிறு­வ­னங்க­ளான 'டாடா கன்­சல்­டன்சி சர்­வீ­சஸ்', 'இன்­போ­சிஸ்', 'விப்ரோ' ஆகி­ய­வற்­றின் பெங்க­ளூரு கிளை­களில் மட்­டும் மொத்தம் 70,000 ஊழி­யர்­கள் பணி­யாற்றி வரு­கிறார்­கள். மேற்­கண்ட 3 நிறு­வ­னங்களும் நேற்று விடு­முறை அறி­வித்­தன. கர்­நா­டகா வன்­முறை கார­ண­மாக தொழில்­துறைக்கு ரூ.22,000 கோடி முதல் ரூ.25,000 கோடி வரை இழப்பு ஏற்­பட்­டுள்­ள­தாக தொழில் வர்த்­தக கூட்­டமைப்­பான 'அசோ­செம்' மதிப்­பிட்­டுள்­ளது.

இருப்­பி­னும், பணி­கள் பாதிக்­கப்­ப­டக்­கூ­டாது என்­ப­தற்­காக வீட்­டில் இருந்தே பணி­யாற்­று­மாறு தங்கள் ஊழி­யர்­களைக் கேட்­டுக்­கொண்டன சில நிறுவனங்கள். விப்ரோ நிறு­வ­னம் நேற்றைய விடு­முறைக்­குப் பதி­லாக 17ஆம் தேதி (சனிக்­கி­ழமை) பணி நாளாக இருக்­கும் என்று அறி­வித்­துள்­ளது. இது­போல் நாட்­டின் முக்­கிய இணைய வர்த்­தக நிறு­வ­னங்க­ளான 'பிளிப்­கார்ட்', 'அமே­சான்' இந்­தியா ஆகி­யவை­யும் நேற்று விடு­முறை அறி­வித்­தன. வாடிக்கை­யா­ளர்­களி­டம் பொருட்­களைக் கொண்­டு­போய்ச் சேர்க்­கும் பணி பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் வன்­முறைச் சம்ப­வங்கள் நிகழ்ந்தது நிறுத்­தப்­பட்டு மாநி­லத்­தில் அமைதி திரும்­பி­ய­தும் அப்­ப­ணி­கள் மீண்­டும் தொட­ரப்­படும் என்று அமே­சான் இந்­தியா செய்­தித் தொடர்­பா­ளர் தெரி­வித்­துள்­ளார். அந்­நி­று­வ­னத்­தின் ஊழி­யர்­கள் அனை­வ­ரும் வீட்­டி­லேயே தங்கி பணி செய்­து­வ­ரு­வ­தா­க­வும் அவர் தெரி­வித்­தார். பொருட்­களை வீடு­களுக்­குக் கொண்டு சேர்க்­கும் ஊழி­யர்­களின் பாது­காப்பைக் கருத்­தில்­கொண்டு அப்பணி நிறுத்­தப்­பட்­டுள்­ள­தாக பிளிப்­கார்ட் நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.