விழுப்புரம்: நடைப்பயிற்சி மேற்கொண்ட திமுக நகரச் செயலர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் காரணமாக விழுப்புரத்தில் பதற்றம் நிலவுகிறது. முன்விரோ தம் அல்லது தொழில் போட்டி காரணமாக இப்படுகொலை சம்பவம் அரங்கேறி இருக்கலாம் என்று காவல்துறை கருதுகிறது. கடந்த திமுக ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடியிடம் தனி உதவியாளராக இருந்தவர் செல்வராஜ். 43 வயதான அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததுடன், விழுப்புரம் பகுதி திமுக நகரச் செயலராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இவருக்கு ஜெயபாரதி என்ற மனைவியும் விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர்.
தினமும் காலை நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வது செல்வராஜின் வழக்கம். அதே போல் நேற்று காலையும் அவர் நடைப்பயிற்சிக்காக வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார். விழுப்புரம் காந்தி சிலை அருகே உள்ள திமுக கட்சி அலுவலகம் அருகே தனது காரை நிறுத்திய பின்னர், அருகேயுள்ள ரயில்வே குடியிருப்புப் பகுதியில் திமுகவைச் சேர்ந்த ஐந்து பேருடன் நடந்துகொண்டிருந்தார். அப்போது 5 இளையர்கள் 2 இரு சக்கர வாகனங்களில் திடீ ரென அங்கு வந்து சேர்ந்தனர்.
பின்னர் வாகனங்களை நிறுத்தி விட்டு, செல்வராஜுக்கு வணக்கம் தெரிவித்துள்ளனர். அப்போது அவர்களில் ஒருவர் தனது முதுகின் பின்னே மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுக்க, ஏதோ விபரீதம் நடக்கப்போவதை உணர்ந்துள்ளார் செல்வராஜ். மர்ம நபர்கள் அவருடன் வந்தவர் களை அரிவாளைக் காட்டி மிரட்டி விரட்டியடித்தனர். இச்சமயம் செல்வராஜ் அங்கி ருந்து தப்பியோட முயன்றார். ஆனால் மர்ம நபர்கள் ஐவரும் அவரைச் சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டி னர். இதில் கழுத்து, வலது கையில் படுகாயம் ஏற்பட்டதால், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் அவர் பலியானார்.
செல்வராஜுடன் வந்த ஜெயப் பிரகாஷ் என்பவர் இக்காட்சியைக் கண்டு பதறிப்போய், அந்த மர்ம நபர்களைத் தடுக்க முயன்றுள் ளார். ஆனால், அவரையும் அந்தக் கும்பல் வெட்டி உள்ளது. இதனால், ஜெயப்பிரகாசுக்கும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. செல்வராஜ் இறந்ததை உறுதி செய்ததும் அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இச்சம்பவம் காரணமாக விழுப்புரத்தில் பதற்றம் நிலவுவ தால் ஏராளமான போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். முன்விரோதம் அல்லது தொழில் போட்டி காரணமாக செல்வராஜ் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டாரா எனும் கோணத் தில் காவல்துறை விசாரித்து வருகிறது. மேலும் தப்பியோடிய கொலை யாளிகள் ஐந்து பேரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள் ளது. மிக விரைவில் கொலையாளி கள் பிடிபடுவர் என போலிசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.