பிசுபிசுத்தது தேமுதிக ஆண்டு விழா: கடும் அதிருப்தியில் விஜயகாந்த்

பிசுபிசுத்தது தேமுதிக ஆண்டு விழா: கடும் அதிருப்தியில் விஜயகாந்த்

1 mins read

சென்னை: கட்சியின் ஆண்டு விழாவுக்கு 50 பேர் கூட திரண்டு வராததால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே இன்று தேமுதிக சார்பில் காவிரி நதி நீர் விவகாரத்தை முன் வைத்து நடக்க உள்ள உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அதிகளவு தொண்டர்களைத் திரட்டி வர வேண்டுமென அவர் சென்னை மாவட்ட கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் தேமுதிக வின் 12ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. சென்னையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடந்த இந்த நிகழ்வுக்குத் தொண்டர்கள், நிர்வாகிகள் என மொத்தம் 50 பேர் மட்டுமே வந்திருந்தனர். "இதனால் கடும் அதிருப்தி அடைந்த போதிலும், அதை வெளிப்படுத்தாமல், கூடியிருந்த வர்களுக்கு மட்டும் இனிப்புகள் விநியோகித்துவிட்டு தனது அறைக்குள் சென்றுவிட்டார் விஜயகாந்த். "அதன் பிறகு நிர்வாகிகளை அழைத்து ஏன் அதிகமானோர் வரவில்லை எனக் கடிந்து கொண்டார்," என விவரமறிந்த அக்கட்சி வட்டாரங்கள் தெரி விக்கின்றன.