சசிகலா புஷ்பா: எந்தக் கட்சியிலும் சேர விருப்பமில்லை

சசிகலா புஷ்பா: எந்தக் கட்சியிலும் சேர விருப்பமில்லை

2 mins read
6faa37ba-bc1c-4b81-8918-a7be51ef63ed
-

சென்னை: நாடாளுமன்ற உறுப்பினரான சசிகலா புஷ்பா நேற்று செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அப்போது எந்தக் கட்சியிலும் சேர விருப்பமில்லை என்றார் அவர். கேள்வி: டெல்லி விமான நிலையத்தில் திருச்சி சிவாவைத் தாக்கினீர்கள். ஏன் அப்படி ஆத்திரமாக நடந்து கொண்டீர்கள்? பதில்: முதலில் நான் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். திருச்சி சிவா பல ஆண்டு அரசியல் அனு பவம் வாய்ந்தவர். மரியாதைக்குரிய நபர். நாங்கள் இருவரும் சென்னை விமானத்தைப் பிடிப்பதற்காக டெல்லி விமான நிலையத்தில் இருந்தோம். அப்போது அவர் அதிமுக தலைமை பற்றி விமர்சித்த தால் நான் கோபம் அடைந்து அப்படி நடந்து கொண்டேன்.

நான் அதிமுகவில் வளர்ந்தவள். திமுக வுக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டவள். அதன் மூலம் உள்ளாட்சி பதவி, எம்.பி. பதவிக்கு வந்தவள். கே: நீங்கள் இருவரும் சிறந்த நண்பர்கள் என்று கூறப்படுகிறதே?

ப: இதை நான் வன்மையாக மறுக்கிறேன். அதிமுககாரர்கள் மற்றும் கட்சியில் தேர்வு செய்யப் பட்ட பிரதிநிதிகள் திமுக உறுப் பினருடன் பேசுவதற்கு அனுமதி இல்லை. மற்ற கட்சிகளில் மாற்றுக் கட்சியினருடன் பேசுவதை பார்க்க லாம். நான் எம்பியாக பதவி ஏற்ற போதுகூட எனக்கு வாழ்த்துச் சொல்லிய திமுக எம்பிக்களுக்குப் பதில் கூற முடியாத நிலையில்தான் இருந்தேன்.

கே: இனி நீங்கள் அதிமுகவில் நீடிக்க முடியாது. உங்களின் அடுத்த அரசியல் நடவடிக்கை என்ன?

ப: நான் எந்தக் கட்சியிலும் சேர விரும்பவில்லை. தற்போது நான் நடுநிலைமையான ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். எனது பதவி காலம் முழுவதும் இது நீடிக்கும்.

கே: உங்கள் குடும்பத்தினர் மீது வேலைக்கார பெண்களால் பாலியல் புகார் கொடுக்கப்பட்டு உள்ளதே?

ப: இந்தச் சம்பவம் 2011ஆம் ஆண்டு நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால், 2016ஆம் ஆண்டு என் மீது புகார் கொடுத்துள்ளார்கள். அவர்கள் ஏழைச் சிறுமிகள். என் மீது புகார் கொடுக்கும்படி கட் டாயப்படுத்தப்பட்டுள்ளனர் என்று சசிகலா புஷ்பா கூறினார்.