கேரளாவில் பொது இடத்தில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம்

கேரளாவில் பொது இடத்தில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம்

1 mins read
f3b69adf-955d-4c83-8854-55cb3e6bdd27
-

திருவனந்தபுரம்: கேரளாவில் பொது இடத்தில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என டிஜிபி அதிரடி உத்தரவிட்டுள்ளார். தற்போது கேரளாவில் பொது இடங்களில் குப்பை கொட்டினாலோ, பிளாஸ்டிக் கழிவுகளை போட்டாலோ, எச்சில் துப்பினாலோ ரூ.500 அபராதம் விதிக்க அவர் உத்தரவிட்டுள்ளார். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு உடனடி அபராதம் விதித்து போலிசார் நடவடிக்கை எடுப்பார்கள். பணம் கட்டாதவர்கள் போலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும் என்று கேரள போலிஸ் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள லோக்நாத் பெக்ரா அறிவித்துள்ளார்.2016-09-19 06:00:00 +0800