39 கோடி ரூபாய் சொத்துவரி செலுத்தாத திருப்பதி நிர்வாகம்

39 கோடி ரூபாய் சொத்துவரி செலுத்தாத திருப்பதி நிர்வாகம்

1 mins read

திருப்பதி: திருப்பதி கோவில் நிர்வாகம் அந்நகராட்சிக்கு 39 கோடி ரூபாய் சொத்து வரியைச் செலுத்தமுடியாது என்று தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வருகிறது. திருப்பதி நிர்வாகத்திற்குச் சொந்தமான சீனிவாசம், விஷ்ணு நிவாசம், மாதவம், கோவிந்தராஜ சத்திரங்களுக்கு கோவில் நிர் வாகம் ஆண்டுதோறும் சொத்து வரி செலுத்த வேண்டும். ஆனால், கடந்த 12 ஆண்டு களாக கோவில் நிர்வாகம் வரி செலுத்தாததால், வட்டியுடன் சேர்த்து வரி பாக்கி 39 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. "கோயில் நிர்வாகம் பக்தர் களுக்குச் சேவை செய்யும் நிறுவனம் என்பதால் சொத்து வரி செலுத்தத் தேவையில்லை," என ஆலய நிர்வாக அதிகாரிகள் கூறினர்.

அதனால், ஆந்திர உயர் நீதிமன்றத்தில் திருப்பதி நகராட்சி அதிகாரிகள் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், "ஆலய நிர்வாகம் சேவை நிறுவனமாக இருந்தாலும் பக்தர்களிடம் வாடகை வசூலிக் கிறது. எனவே நகராட்சிக்கான வரிப் பாக்கியை உடன் செலுத்த வேண்டும்," என உத்தரவிட்டது. இந்த விவரம் அறிந்த ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, திருப்பதி நகராட்சிக்கான வரியைச் செலுத்தும்படி ஆலய நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். ஆனாலும் கோவில் நிர்வாகம் தொடர்ந்து வரி செலுத்த மறுத்து வருகிறது. இதனால், திருப்பதி யில் நடந்துவரும் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.