புதிய கல்விக் கொள்கை: மாணவர் அமைப்பு கடும் எதிர்ப்பு

புதிய கல்விக் கொள்கை: மாணவர் அமைப்பு கடும் எதிர்ப்பு

1 mins read
ca1e491b-2e67-473f-a3da-6f1e4d6083a0
-

மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ள புதிய கல்விக் கொள்கைக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புதிய கல்விக் கொள்கையை அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், புரட்சிகர மாணவர், இளைஞர் முன்னணியின் சார்பில், சென்னையில் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் பங்கேற்ற பெண்களைப் போலிசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். படம்: சதீஷ்