சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் நுழைய முற்பட்ட மூவர் கைது

சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் நுழைய முற்பட்ட மூவர் கைது

1 mins read

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சி செய்த மூன்று ஆடவர்கள் நேற்று கைது செய்யப் பட்டனர். உட்லண்ட்ஸ் நீர் முகப்புக்கு அருகே நேற்று அதிகாலை 5.16 மணியளவில் மூன்று மிதவைகளை கரையோரக் காவல் படையினர் பார்த்ததாகச் சிங்கப்பூர் போலிஸ் படை நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது. அந்த மூன்று மிதவைகளுக்கு அருகே சென்று பார்த்தபோது 24 முதல் 32 வயதுடைய மூன்று ஆடவர்கள் அங்கு மிதந்து வந்தனர். அம்மூவரும் உடனே கைது செய்யப்பட்டதாக போலிஸ் அறிக்கை தெரிவித்தது. கடப்பாடுடனும் விழிப்புடனும் செயல்பட்ட தனது அதிகாரிகளைப் கரையோரக் காவல் படை தளபதி சு சின் யுன் பாராட்டினார்.