திருப்பூர்: உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி தொடர்பில் திமுகவின் முடிவுக்காகக் காத்திருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஏற்றுக் கொள்ளும் கட்சிகளைப் பொறுத்தே காங்கிரஸ் நிலைப்பாடு மாற்றமா, ஏற்றமா என்பது தெரியவரும் என்றார். "திமுக கூட்டணியில் இணைய பல கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளன. அக்கட்சிகளை எல்லாம் திமுக ஏற்றுக் கொள்கிறதா என்பதைக் கவனிப்போம். திமுக தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலினை சந்தித்தபோது உள்ளாட்சித் தேர்தல் குறித்துப் பேசினேன். மேலும் திமுகவுடன் கூட்டணி என்பதையும் சொன்னேன்," என்றார் திருநாவுக்கரசர். இதற்கிடையே உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
காத்திருக்கும் தமிழக காங்கிரஸ்; தனித்து களமிறங்கும் பாஜக
1 mins read

