தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வங்கிகளுக்கு ஐந்து நாள் தொடர் விடுமுறை

1 mins read

சென்னை: அக்டோபர் மாதத்தில் பண்டிகைகளையொட்டி தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு வங்கிகள் மூடப்படுவதால் பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது. வரும் அக்டோபர் 10ஆம் தேதி திங்கட்கிழமை ஆயுதபூஜை பண்டிகையும் 11ஆம் தேதி விஜயதசமியும் 12ஆம் தேதி மொகரம் பண்டிகையும் கொண் டாடப்படுகின்றன. இதனால் 3 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும், 8ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை என்பதாலும் மறுநாள் 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்ப தாலும் வங்கிகளுக்கு தொடர்ந்து ஐந்து நாள் விடுமுறை வருகிறது. இதனால் வங்கிப் பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள் ளது. அத்துடன் ஏடிஎம் மையங்களிலும் பணத்தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளதாகச் சொல்லப்படுகிறது.