13 மணி நேர தாமதம்: சிங்கப்பூர் சென்ற பயணிகள் கடும் அவதி

13 மணி நேர தாமதம்: சிங்கப்பூர் சென்ற பயணிகள் கடும் அவதி

1 mins read

சென்னை: சுமார் 13 மணி நேர தாமதம் காரணமாக சென்னையில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானப் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு 1.25 மணியளவில் சிங்கப்பூர் செல்ல இருந்த விமானம், விமான நிலைய ஓடுபாதைக்குச் சென்றபோது, அதில் இயந்திரக் கோளாறு இருப்பது கண்டறியப் பட்டது. இதையடுத்து பயணம் ஒத்திவைக்கப்பட்டு, பயணிகள் அனைவரும் ஓய்வு அறையில் தங்கவைக்கப்பட்டனர். எனினும் அடுத்த 13 மணி நேரத்துக்கு அக்கோளாற்றைச் சரிசெய்ய முடியவில்லை. இதனால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்து விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை, விமான நிலைய அதிகாரிகள் சமாதானப்படுத்தினர். இந்நிலையில், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்த மற்றொரு விமானத்தில் பயணிகள் அனைவரும் சிங்கப்பூர் அனுப்பி வைக்கப்பட்டனர்.