புதுடெல்லி: டெல்லியில் வகுப்பறையில் ஆசிரியரைக் கொலை செய்த வழக்கில் பிளஸ்டூ மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லி நாங்கலாய் அரசு பள்ளியில் வருகைப் பதிவு குறைவாக இருப்பதாக 12-ம் வகுப்பு மாணவன் ஒருவரை ஆசிரியர் முகேஷ் குமார் இடைநீக்கம் செய்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர் தனது நண்பருடன் சேர்ந்து ஆசிரியர் முகேஷ் குமாரை வகுப்பறையில் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கொலை தொடர்பாக அப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்த இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள தாகப் போலிசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்த ஆசிரியர் முகேஷ் குமார் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.
ஆசிரியர் கொலை தொடர்பில் பிளஸ் டூ மாணவர்கள் கைது
1 mins read

