தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடலோரப் பாதுகாப்பு நடவடிக்கை ஒத்திகை

1 mins read
8285fa96-12a4-4903-9174-6f8f4b0ab4ec
-

சென்னை: தீவிரவாதிகள் ஊடுரு வலைத் தடுக்க தமிழகம் முழு வதும் நேற்று முன் தினம் காலை கடலோரப் பாதுகாப்புப் படையின் ஒத்திகை நடந்தது. அப்போது போலி வெடிகுண்டுகள், துப்பாக்கி கள் பறிமுதல் செய்யப்பட்டன. முன்பு 'ஆபரே ஷன் ஆம்லா' என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த ஒத்திகைக்குத் தற்போது 'சாகர் கவச்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு மும்பையில் கடல் வழியாகப் புகுந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இச்சம்பவத்துக்குப் பிறகு கட லோரப் பாதுகாப்பை பலப்படுத்து வதற்காக அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் பிறகு 6 மாதங்களுக்கு ஒரு முறை இந்தப் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.

'ஆபரேஷன் சாகர்' என்னும் கடலோரப் பாதுகாப்பு நடவடிக்கை ஒத்திகையை காவல்துறை உயர் அதிகாரிகள் நேரடியாகக் கண்காணித்தனர். படம்: தமிழக தகவல் சாதனம்