கஞ்சா கருப்பு மீது வழக்கு

கஞ்சா கருப்பு மீது வழக்கு

1 mins read

மேலூர்: நடிகர் கஞ்சா கருப்பு, அவரது மனைவி உள்ளிட்ட 11 பேர் மீது மேலூர் அருகே உள்ள கீழவளவு காவல் நிலையத்தில் சங்கிலிப் பறிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக நாளேடு ஒன்று தெரிவித்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு புலிமலைப்பட்டியில் நீதிதேவன் என்பவரின் தலைமையில் சிவகங்கை மாவட்டத்தில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தி விட்டு ஒரு குழு வந்துள்ளது. அவர்களை வழிமறித்த கஞ்சா கருப்பு உள்ளிட்டோர், அவர்களை மிரட்டி ஆறரை சவரன் நகையைப் பறித்துவிட்டதாகவும் சம்பவம் நடந்தபோது கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.