இல.கணேசன்: பிரதமர் அறிவிப்பார்

1 mins read

சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவின்படி விரைவில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் என தமிழக பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார். இதற்கான அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிடுவார் என சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் குறிப்பிட்டார். மத்திய பிரதேசத்தில் இருந்து என்னை டெல்லி மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்ய முடிவு செய்த பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவுக்கு நன்றி," என்றார் இல. கணேசன்.