ஜெயா நலமடைய குழந்தைகள் நலனைப் பறிப்பதா?: ராமதாஸ்

ஜெயா நலமடைய குழந்தைகள் நலனைப் பறிப்பதா?: ராமதாஸ்

1 mins read
5f404412-ff52-45ae-b7ca-534bfcc49c0c
-

சென்னை: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், "முதல்வர் ஜெய லலிதா உடல்நலம் பெற வேண் டும் என்பதற்காக அவர் வெற்றி பெற்ற ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியிலுள்ள தண்டையார் பேட்டை நேதாஜி நகர் முருகன் கோவிலில் கடந்த திங்கட்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டிருக் கிறது. "வடசென்னை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் நடத்தப்பட்ட அந்த நிகழ்வில் நேதாஜி நகர் முருகன் கோவிலில் தொடங்கி தண்டையார்பேட்டை மணிக் கூண்டு அருகிலுள்ள சேனியம் மன் கோவில் வரை ஆயிரத் திற்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் ஏந்தி வந்தனர்.

"அதுமட்டுமின்றி, நூற்றுக்கும் மேற்பட்டோர் உடலில் அலகு குத்தி வந்தனர். அவர்களில் இருபதுக்கும் மேற்பட்டோர் 5 முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகள். "முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம்பெற வேண்டும் என் பதுதான் அனைவரின் விருப்ப மும். அதற்காகக் குழந்தைகள் மீது இதுபோன்ற வன்முறைகளை திணித்துக் கொடுமைப்படுத் துவது ஏற்றுக்கொள்ள முடியா தது. இத்தகைய செயல்களில் எவரும் ஈடுபட வேண்டாம் என்று ஆட்சித் தலைமையும் அதிமுக தலைமையும் அறிவுறுத்த வேண் டும்," என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.