புதுடெல்லி: சிக்குன்குனியா, டெங் கிக் காய்ச்சல் போன்ற நோய்களால் டெல்லி மக்கள் பாதிக்கப்படு வதற்கு அரசு நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரி வால் ஆட்சி புரிந்து வரும் டெல்லி யில் சிக்குன்குனியா, டெங்கிக் காய்ச்சலால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த வழக்கு டெல்லி உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் "சிக்குன்குனியா, டெங்கி நோய்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை ஆளுநர் நஜீப் ஜங் இருவருக்கு மிடையே நேற்று நடைபெற்ற கூட்டத்தின் முடிவுகள் கடும் ஏமாற்றம் அளிக்கின்றன," என கடுமையாகச் சாடியது.
"இது தொடர்பாக மீண்டும் ஒரு கூட்டத்தை டெல்லி அரசு, துணை நிலை ஆளுநர் இருவரும் நேற்று வியாழன் மாலை 5.30 மணியளவில் நடத்தி ஆக்க பூர்வமாக தீர்வுகாண வேண்டும். அத்துடன், இந்தக் கூட்டத்தில் மூத்த வழக்கறிஞர் கொலின் கொன்சல்வாஸ் கலந்துகொண்டு நோய்களைத் தீர்ப்பது எப்படி எனத் தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். "கூட்டத்தில் கலந்து கொள் பவர்கள் மக்களின் நலனை முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டும். முடிவுகள் எடுப்பதில் ஒருவருக் கொருவர் உதவிபுரிய வேண்டும்," என்று அறிவுரை கூறி வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 17ஆ-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

