உள்ளாட்சித் தேர்தலுக்குத் தடை நீடிக்கும்

உள்ளாட்சித் தேர்தலுக்குத் தடை நீடிக்கும்

1 mins read
274c8010-091e-4627-b622-e5b85aee6976
-

சென்னை: தமிழக உள்ளாட்சித் தேர்தல் தடை செய்யப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்றுத் தெரிவித்தது. தமிழக உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதி பதிகள், உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்குத் தடை விதிக்க முடியாது என்று கூறினர். முன்னதாக உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு முறையாகப் பின் பற்றப்படவில்லை என்று கூறி திமுக தொடர்ந்த வழக்கில் உள் ளாட்சித் தேர்தலை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைக்கப் பட்டதையடுத்து நேற்று பிற் பகலில் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் குலு வாடி ஜி. ரமேஷ், பார்த்திபன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. பின்னர் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், "உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது," என்று கூறினர். மேலும் வழக்கு விசாரணையை வரும் 18ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும் அவர்கள் அறி வித்தனர்.