'ஜெயலலிதாவைச் சந்திப்பேன்'

'ஜெயலலிதாவைச் சந்திப்பேன்'

1 mins read
7a795222-d34b-4652-8777-bd32ec516a9b
-

சென்னை: முதல்வர் ஜெயலலிதா குணமடைந்ததும் நேரில் சந்திக்கப்போவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தி யாளர்களிடம் பேசிய அவர், "முதல்வர் ஜெயலலிதா விரை வில் குணமடைந்து வழக்க மான பணிகளை மேற் கொள்ள வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக் கிறேன்," என்றார். "முதல்வரிடம் உடல்நலம் குறித்து விசாரிக்க அப்போலோ மருத்துவ மனைக்குச் சென்றவர்கள் யாரும் அவரை நேரில் பார்த்ததாகவோ நேரில் நலம் விசாரித்ததாகவோ சொல்ல வில்லை. இந்நிலையில் நானும் மருத்துவமனைக்குச் சென்று அவருக்குத் தொந்தரவு கொடுக்க விரும்பவில்லை.

முதல்வர் குணம் அடைந்ததும் அனுமதி கிடைத்தால் அவரை நேரில் சந்தித்துப் பேசுவேன். நான் அதிமுக இளைஞரணிச் செயலாளராக இருந்தபோது அவர் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தார். அவர் எதிர்க்கட்சித் தலை வராக இருந்தபோது நான் எதிர்க்கட்சித் துணைத் தலை வராக இருந்தேன். இப்படி முதல்வர் ஜெயலலிதாவுடன் இணைந்து பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். எனவே தனிப்பட்ட முறையிலும் தமிழக காங்கிரஸ் தலைவர் என்ற முறையிலும் அவரை சந்திப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை," என்றார் திருநாவுக்கரசர்.

திருநாவுக்கரசர். படம்: தமிழக ஊடகம்